காலநிலை மாற்றம்
காலநிலை நடவடிக்கை
காலநிலை நெருக்கடியால் உருவாகியுள்ள பேரழிவு நம்மைச் சுற்றி உள்ளது. சில அரசாங்கங்கள், நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் அதன் விளைவுகளைத் தணிக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இது போதுமானதாக இருக்குமா?
குழந்தைப்பருவம் எப்படி மாறுகிறது என்பதை ஆய்வு செய்வதற்காக நாங்கள் 21 நாடுகள் முழுவதும் 15–24 மற்றும் 40+ வயதுடையவர்கள் மத்தியில் ஆய்வு நடத்தினோம்.
ஆய்வுபற்றி மேலும் படிக்கவும்குழந்தைப் பருவத்தின் மாறும் தன்மைபற்றி மேலும் அறிந்து கொள்ள மேலுள்ள கேள்விக்குப் பதிலளிக்கவும்
கேள்விக்குத் திரும்பவும்சராசரியாக, பேரளவிலான 86% இளைஞர்கள், காலநிலை மாற்றத்தின் பேரழிவு விளைவுகளைக் குறைக்க மனிதர்கலால் இன்னும் செயல்பட முடியும் என்று நம்புகிறார்கள். அவர்களுக்கு நம்பிக்கை இருக்கிறது!
குழந்தைப் பருவத்தின் மாறும் தன்மைபற்றி மேலும் அறிந்து கொள்ள மேலுள்ள கேள்விக்குப் பதிலளிக்கவும்
கேள்விக்குத் திரும்பவும்சராசரியாக, 73% இளைஞர்கள் அவர்கள் அரசாங்கம் குறிப்பிடத் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.
ஏழை நாடுகளில் காலநிலை மாற்றம்குறித்து அரசாங்க நடவடிக்கைக்களுக்கு இளைஞர்களுக்கு இடையே உறுதியான ஆதரவை நாங்கள் பார்க்கிறோம்.
இந்த நாடுகள் காலநிலை நெருக்கடிக்கு எதிராக நடவடிக்கைகள் எடுப்பதில் குறந்தபட்ச ஆயத்தமான நிலையில் இருப்பதால், மேலும் அதன் விளைவுகளுக்கு அதிகமாக வெளிப்படுகின்றன எனக் கூறப்படுகிறது.
ஆச்சரியப்படும் விதமாக, இந்தக் கண்ணோட்டங்களில் குறிப்பிடத் தக்க தலைமுறை இடைவெளியை நாம் காணவில்லை: காலநிலை மாற்றத்தின் மோசமான விளைவுகளைத் தடுத்து நிறுத்த முடியும் என்றும் தைரியமான அரசாங்க நடவடிக்கை தேவை என்றும் வயதானவர்கள் சமமாக நம்புகிறார்கள்.
ஒரு தலைமுறைப் பிரிவை நாம் காணும் ஒரு பகுதி: முக்கிய உலகளாவிய சவால்களைச் சமாளிக்கும்போது நாடுகள் ஒத்துழைக்க வேண்டுமா.
இங்கு இளைஞர்கள் அவர்களே சுயமாகச் செயல்படுவதை விட ஒன்றாகச் செயல்படும் தேசிய அரசாங்களுக்கு அதிகம் ஆதரவளிக்கின்றனர்
இது குறிப்பாக இந்தோனேசியா, அமெரிக்கா, நைஜீரியா, பங்களாதேஷ் மற்றும் <4>மாலியில்</ 4> உண்மையாக உள்ளது.